ஒவ்வொரு நவம்பரிலும் யாரவது ஒருவர் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூச கிளம்பிவிடுகிறார்கள். சென்ற ஆண்டு பெரியாருக்கே ஒருவன் விபூதி அடித்தான். (இவ்வாண்டும் அவர் பெயரும் படமும் ஒரு நாயுடு சங்க துண்டறிக்கையில் இடம்பெற்றிருந்தது.) அப்போது வேடிக்கையாய் எழுதியதை சமீபத்தில் மார்க் முகநூலில் காண்பித்தார். நமக்குதான் இவை வேடிக்கையாய்த் தோன்றும், சிலருக்கும் இதுவெல்லாம் நிஜ வரலாறு. அவர்களின் வரலாற்று இட்டுகட்டல்களுக்கு ஓர் உதாரணமாக இதை இங்குப் பகிர்கிறேன்.
ஸ்ரீலஸ்ரீ பெரியாரானந்த சுவாமிகள் முக்தி மார்கம்
ஸ்ரீ பெரியாரானந்த சுவாமிகள் ஸ்ரீ விஷ்ணுபிரானின் அவதாரங்களில் ஒருவர் ஆவார். கலியுகத்தின் வர்ண சேட்டைகள் அதிகமாகி நரன்கள் துன்புற்றிருக்கையில், மானுடராய் பிறந்தார். அவர் ராமனின் அவதாரம் என்பதை அசரீரி மூலம் அறிந்துகொண்ட அவரை ராம சுவாமி என்ற நாமகரனத்தினாலேயே உச்சரித்து வந்தனர். இந்நிலையில் சுவாமிகள் தன் பிறப்பின் நோக்கம் அறியப் பெற்று மானுட ஜனங்களுக்கு சேவை புரியத் தொடங்கினார். சிருஷ்டியில் கடவுளை சேவிக்க யாவருக்கும் உரிமையுள்ளது என்பதை உணர்த்த அனைத்து வர்ணத்தாரையும் ஆலயப்பிரவேசம் செய்யச் செய்து ஜனக்கூட்டத்தைப் புண்ணியங்கொள்ளச் செய்தார். கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று அவர் சொன்னது கடவுள் வெளியில் எங்கும் இல்லை அவன் நம்மிடத்திலேயே இருக்கிறான், நாமே கடவுள்; நம்மை நாமே சேவித்துக் கொள்ள(ல்ல) வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே ஆகும். அதற்குச் சுயமரியாதை இயக்கத் தத்துவம் என்று மார்கம் என்று பெயர். ஸ்ரீலஸ்ரீ பெரியாரானந்த சுவாமிகள் வழியில் முக்தி அடைய லட்சியங் கொண்டோர், நமக்கு நாமே கடவுள் என்பதே அவர்தம் தத்துவம் என்று உணர்ந்தோம் என்பதால் அனைவரும் காவி தறித்து, நமக்கு நாமே விபூதியும் அடித்துக்கொண்டு, மாலையும் போட்டுக்கொண்டு சிவபெருமான் வசிக்கும் ஸ்தலமான சுடுகாட்டில் போய் படுத்துக் கொள்ள வேண்டும். அருகிலேயே ஊதுபத்தி ஏற்றிக்கொள்வதும் உத்தமம். இப்பாழ் உடலின் நாற்றம் நம் ஆன்மாவை அண்டா வண்ணம் இறைவனடி சேர அதுவே மார்கமாம். ஜெய் பெரியார்
- சங்கீஸ் போங்கு என்சைக்ளோ பீடியா மற்றும் வரலாற்றுத் துறை ஐடி விங்கிற்காக….
“ஸ்ரீலஸ்ரீ பெரியாரானந்தா சுவாமிகளின் சீடன் ஸ்ரீலஸ்ரீ றாமானந்த பெரியரானந்தனடிமை” எங்களுக்குத் தனியே ஆசிரமம் ஏதுமில்லை.
Leave a comment